1.
தனித்துவமானவன்
தனிமை விரும்பிஅவன்
மழலை மணம்அவன்
எளிமை குணம்உடையவன்
.
2.
எதற்கும் பாகுபாடுவேண்டாம்என்பவன்
எதைரசித்தாலும் அழகென்றே வரிபொழிபவன்
.
3.
நண்பர்கள் அவன்சுற்றி ஏராளம்
அதுவே அவனின் மிகப்பெரிய படைபலம்
4.
யார்பின்னாலும் தொடர்ந்துசென்ற கணமிருக்காது
காதலென்றால் எங்கேவிற்கும் கேள்விகேட்பவன்
.
5.
சிக்கிகொண்டான் சிக்னலில்
இணையத்தில் இதயம்தொலைத்தான்
.
6.
அவள்முகம் அழகு
அகத்தால் அவன்உணர்ந்தான்
அடுத்தநிமிடம் இதுதான்
காதலென்று புரிந்துகொண்டான்
.
7.
திறக்கும்மனம் பொய்சொல்லுமா..?
திரும்பி போ என்றால்
நீ இல்லா வாழ்க்கை
நான் மட்டும் வாழ முடியுமா..?
8.
என்னோடு இப்போ வா
என்றெல்லாம் நான் சொல்லல
வரவேனும் என்னோடு நீ
வாழ்ந்துமுடிக்கணும் நூறு
ஆண்டுகள் உன்னோடு நான்
9.
காத்திருப்பேன் காதலோடு
கரம்பிடிப்பேன் கணவனாக
என்னெல்லாம் என்ஆசை
உன்மீது, உன்னைத்தாண்டி
எதுவும் இல்லையடி உன்னிடம்பேச..!
10.
காதல் தொல்லையில்லை
காதல் தொடும்தூரமில்லை
தொல்லைதருவதால், தொடுவானம்
ஆகாமல் இருப்பதில்லை
எல்லாம் புரிந்தும் உன்மௌனம்
என்னை கொள்ளுதடி..!
.
11.
தினம்தினம் நீ வந்து தேநீர் மட்டும்கொடு
விரல்படும் அளவு தூரம் இரு
எதை வேண்டுமானாலும் என்னிடம்எடு
என் இருகண்கள் தவிர
.
12.
சேலையால் உன் முந்தானையால்
என்முகத்தை மூடு
உன்னைகண்ட மயக்கத்தில்
என்னை நான் மறந்தேன்
வேறுஏதும் பார்க்க ஆசையில்லையடி
13.
கண்மணியே திரும்பி ஒருமுறை பார்
செத்துபோகும் இதயம் மறுவாழ்வுகொடு
14.
எளிமையான வாழ்வில் எல்லாம் காணலாம்
நீ என்மீது தலை வை, நான் உன்பாதம் தொடுகிறேன்
இமயம் அதுதூரமா..? வா நாம் போகலாம்
விரல்கோர்த்து விழிபார்த்து மௌனத்தால் சத்தம்போடலாம்
15.
மனமெல்லாம் காதலோடு வாழலாம்
இதழ் இரண்டும் சேர்த்துக்கொள்ள
எச்சில்கள் இடம்மாற்றலாம், சரிமட்டும் சொல்லு
சரிபாதி நானாகிறேன்..!
16.
இதயத்தில் என்னிடம் வந்தாள்
எல்லாம் நானென்று இக்கணம் திறந்தாள்
தேவையில்லை ஏதும் அன்பாய்நீயிருந்தால்
அதுவே போதும்
உறுதுணையாய் உயிராய், மறுகணமே மணப்பாயா..?
17.
துளிநீர் விடாத பூக்கள் எப்படி மணக்குமடி
காரணம் இருக்கு, காலமும் இருக்கு
காத்திரு கொஞ்சம், உனக்காக எந்நாளும்
உன்னோடு நானே வருவேன், காத்திரு கண்மணியே..!
.
18.
யார் என்ன தடுத்தாலும், யார்முன்னே வந்துஉன்னை
வேண்டாம் சொன்னாலும், மாறாதடி என்மனம்
சேர்ந்து வாழனும்தானே நாம் பிறந்தோம்..!
19.
போவோம் வானம்
அங்கேயே வாழ்ந்துவிடுவோம்
பிரிக்க யாரும்வேணாம், நினைப்பிலும் யாரும் வேணாம்
நம்வாழ்வை சரிபாதி பங்குபிரிப்போம்
சரிசமமாய் எந்நாளும் வாழ்ந்துமுடிப்போம்.!
20.
நான்பிறந்ததே உனக்காக தானடி
ஒருகணமும் அதை நீ மறக்காதடி
எந்நாள் மாறினாலும் என்அன்பு உன்மீது மாறாதடி
.
மறுகணம் நான் பிறந்தாலும்
மண்ணோடு பிறக்காமல் இறந்தாலும்
துளிஉயிரும் உன்அன்பு மறக்காதடி
ஒருநிமிடம் நீ இன்றி என்இதயம் தீயில்
வேகாதடி..!
.
காதலிமனைவி எல்லாம் எனக்கு நீதானே டி..!
-கவிதை காதலன்..❤️💫
காதலிக்கதெரியாது ஆண்களுக்கு.❤️
Related Posts
காதல் முதல் கரம்சேரும் வரை.❤️
நீயின்றி என்வாழ்வும் அழகில்லைநீயின்றி நானும் என்இன்பமும்என்னோடு இவ்வளவு அழகாய்எந்நாளும் இருக்கவேபோவதில்லை.வாழ்வும் வாழ்வின் நல்லதையும்உன்னோடு என்றே நான்எண்ணிஇருந்தேன்உன்னோடு வாழ மட்டுமேஎன்நெஞ்சம் என்று ஆசைகொண்டேன்.தீராத காதல் உன்னோடு போதும்தினம்தினம் உன்னைஅனுஅனுவாய் புதுபுதுதாய்காதல்செய்தால் அதுமட்டுமே இன்பமாகும்.உன்னோடு ஒருவாழ்வுஅதுதான் என்வாழ்வில்நான்கேட்கும் வரமும் சரிஎன்வாழ்வில் நான்கேட்கும் வரனும் அதுதான்.என்ஓரமே…
ஓர் பெண்ணின் காதல்கவிதை.❤️
அவளுக்கு அதிகமாய் ஆசையென்று ஏதுமில்லை, அவன் மட்டும் ஆயுளுக்கும் அவளுக்கு போதும்❤️❤️❤️