எழுதும் என்மனதும்

முதல்முறை பேசதிறக்கும்

கவிதை என்இதழும்

.

காதல் கவிதையா

கல்யாணம் ஆனக்கதையா

பிரச்னை இல்லாமலா

எல்லாம் சரியாகுமா.?

.

எதுவும் தெரியாத மழலை

வேறயாரு நானும்தான்

மனதை கெடுத்தவன் மடிசாய இடமும்

தந்தவன் நீதான் அது..!

.

காதல் தொடக்கம்

காதல் நெருக்கம்

எழுத்தில் நிற்குமா.?

எவ்வளவு வர்ணிக்க

அதுவும்தான் தாங்குமா.?

.

அண்ணன் நண்பனாய் நீ வந்தாய்

ஆயுளும் வேண்டும் என்று வாங்கிகொண்டாய்

.

அதிக அழகெல்லாம் நீ ஒன்றுமில்லை

என்னை வச்சு பார்க்கும்போது

நீயும் கொஞ்சம் பரவாயில்லை

.

பிடித்து போயும் அலையவிடேன்

நீ கெஞ்சும் அழகை ரசித்தேன்

விருப்பம்கொண்டு நான்உன்னில் இணைந்தேன்

யார்கண் பட்டதோ கொஞ்சம் நாட்கள்

உன்னை நானும் பிரிந்தேன்

.

வலி வேதனை அர்த்தம் அன்றுநான் உணர்ந்தேன்

இருக்கும் நாட்கள் எல்லாம் எதுகென்று உதறிஎறிந்தேன்

.

உனக்கும் வலிக்கும்தானே

வலிகள் நிச்சயம் இருக்கும்தானே

எனக்காய் நீ பிறந்தாய்

உனக்காய் நான் வந்தேன்

இடையில் யார்இதெல்லாம் பிரிக்க யாராவது முடியுமா.?

.

என்முடிவில் மாற்றமில்லை

என்விதிக்கு நீதான் ஆயுள்எல்லை

அன்பின் பிறப்பிடம் நீதானோ.?

உன்அன்பில் மூழ்கி நான் விழுந்தேனோ.?

.

எழவும் முடியாமல்

மீண்டு வரவும் முடியாமல்

என்னதான் செய்தாயோ.?

என்னநானும் மறக்க நீயும் என்னதான் செய்தாயோ.?

.

பேசும் நேரம்எல்லாம் உன்நியாபகம்

பகல்போய் நிலவு வந்தாலும் ஆகாயத்தில்

உன்னையே என்இமைகள் தேடுதல்

.

நாளெல்லாம் நீ வருவ

சரி இரவு உறங்க போனாலும்

அங்கும் நீயே முழுநேரம் தெரியுற

.

உன்னாலே என்னோட தூக்கம்போச்சு

மனசும் காலப்போக்கில் உந்தன்வசம் வந்தாச்சு

பிரச்னை வந்தால் என்ன.?

நீ என்னோட இருக்க அதுபோதும்தானே..!

.

ஒருவழியாய் வலிமறந்தோம்

நீ சம்மதம் பேச என்மனம் சிரிக்க

நாளாச்சு இதெல்லாம் இதெல்லாம்

என்முகத்தில் நான்பார்த்து

கண்ணீர் வழியுது பதறாதே

ஆனந்தம் அடுத்தகட்டம்அது

.

இப்போது வா

உன்வீடு கூட்டி போ

இங்கிருந்து சலித்துபோச்சு

உன்சமைலயறை வந்து

கொஞ்சம் மாற்றிஅமைக்கணும்

.

பகல்கனவெல்லாம்

கண்முன்னே அரங்கேற்றம்

காதல் கல்யாணம் நானும் சிரிக்கும் தருணம்

பெண்மையாய் நிஜமாற்றம்

கூடவே நீ இரு

கூடுதல் ஆசையென்று எனக்குஏது.?

.

விதிமுழுக்க நீ வந்தால் போதும்

விழிநேசிக்கும் எனக்கு வேறென்ன வேணும்

விரல்கோர்வையோடு கொஞ்சம் தூரம்

வீதிஉலா கூட்டி போ அதுபோதும்

,

காலமும் எனக்கு நீ வருவேன் என்று சொல்லு

ஆயுளும் அன்பாய் இதுபோல இருப்பேன் என்று சொல்லு

வரமாய் கடவுளிடம் இனிநான் என்னகேட்க போறேன்

வருகையாய் ஏழுஜென்மம் இரட்டிப்பு ஆக்கி

தா என்றே விண்ணப்பம் தரபோறேன்

காலமும் எனக்கு நீதான் வேணும்

கண்ணீர்விடும்போதும் ஆறுதல் கொடுபோதும்

மீண்டும் ஜென்மம் வாழ்வோம்

மீளாது காதல் சிநேகிப்போம்..!

– கவிதை காதலன்