நீயின்றி என்வாழ்வும் அழகில்லை
நீயின்றி நானும் என்இன்பமும்
என்னோடு இவ்வளவு அழகாய்
எந்நாளும் இருக்கவேபோவதில்லை
.
வாழ்வும் வாழ்வின் நல்லதையும்
உன்னோடு என்றே நான்எண்ணிஇருந்தேன்
உன்னோடு வாழ மட்டுமே
என்நெஞ்சம் என்று ஆசைகொண்டேன்
.
தீராத காதல் உன்னோடு போதும்
தினம்தினம் உன்னை
அனுஅனுவாய் புதுபுதுதாய்
காதல்செய்தால் அதுமட்டுமே இன்பமாகும்
.
உன்னோடு ஒருவாழ்வு
அதுதான் என்வாழ்வில்
நான்கேட்கும் வரமும் சரி
என்வாழ்வில் நான்கேட்கும் வரனும் அதுதான்
.
என்ஓரமே நீயும்
என்நிழல் தூரம் உன்நிழலும்
உன்அசைவுகள் எனக்கு தெரியும்
உன்மனம் இசைக்கும் நொடியும்
கேட்கவே நான் உன் அருகில் வேணும்
.
இடம்மாறி நீ போகவேகூடாது
நெஞ்சம் இனி ஒரு ஜென்மம்
உன்னைவிட்டு எந்நாளும் பிரிந்துவாழக்கூடாது
எத்தனை நாட்கள் ஏக்கம்இது
தூரமாய் நீயும் தொலைதூரமாய் நானும்
பார்க்க இணையம் மட்டும்
இணைந்த இதயம் எத்தனை
நாட்கள் இப்படியே பிரிந்து வாழும்
.
என்னஎன்ன சொல்ல
உன்னைபற்றியும் உன்காதல் பற்றியும்
எழுதஎழுத பக்கங்கள் தீர்ந்துதான் போகும்
என்னசொன்னாலும் என்ஆசை
இருவரிகளில் முடிந்திடுமா
உன்னோடு ஒருயுகம் என்றாலும் என்ஆசையும் ஏற்றுக்கொள்ளுமா..!
.
நெற்றிபொட்டு முதல்
கால்அணி முதல் எல்லாம் நீ தந்ததே
என்றோ ஒரு நாள்
நீயும் நானும் மனமேடை ஏற
முன்பே நாம்செய்த கல்யாணம் ஒத்திகைஇதெல்லாம்
.
உன்வாசனை அது போதையா
ஆக்கிவிடுகிறதே என்னை பேதையா
அலையும் மனதிற்கு திரியும் பாவைக்கு
நீயின்றி வாழ்ந்திட எண்ணுமா
இவ்வளவு அழகாய் நீயின்றி ஆகுமா..?
.
இணைசேர்வோம் இந்நாள்
எல்லாம் அழகாய் ஆகும்
நெற்றிமுத்தம் இட்டு தாலிகட்டு
நெடுநாள் பயணிப்போம் என்றே
சத்தியம் மறுநொடியே செய்துவிடு
முழுநேரமும் முழுநாளும்
எனக்கென்று நீ மட்டும் போதும்
காற்றில் வீசும் மனமும்
உன்சாயல் உன்நிழல்
என்னோடு ஒட்டியே இருந்தால்போதும்
முழுதும் நீ மட்டும் எனக்குபோதும்
அதைத்தாண்டி எனக்கு ஆசையே இல்லை ஏதும்..💕
காதல் முதல் கரம்சேரும் வரை.❤️
Related Posts
ஓர் பெண்ணின் காதல்கவிதை.❤️
அவளுக்கு அதிகமாய் ஆசையென்று ஏதுமில்லை, அவன் மட்டும் ஆயுளுக்கும் அவளுக்கு போதும்❤️❤️❤️
காதலிக்கதெரியாது ஆண்களுக்கு.❤️
ஆண்களுக்கு எல்லாம் நிச்சயமாய் பொய்யாய் காதலிக்க தெரியாது..❤️💯
super
அருமையான வரிகள்😍😍😍