எழுதுவதெல்லாம் பொய்யில்லை
என்மனதின் பேசும்வார்த்தைகள் யாவும்
ஒருவரியும் மறக்காதே
என்பேச்சும் என்றும் மாறிடாதே..!
.
திறந்துசொல்கிறேன் திரும்பி
நினைக்கும்நொடி
நீ என்நிழல்தொடும் தூரமில்லை
எடுத்துகொள்ளவும் இயலாமல்
விட்டுவிடவும் மனமில்லாமல்
கடந்துசெல்ல காரணம்தேடி
விலகிபோகும் நிழல் நானடா..!
.
நீயின்றி நானில்லை
என்இதயம் உணரும்நொடி
நிஜமாகவே நீ என்னோடு இல்லை
வலி இருந்தும் பலமுறை உன்மீது
தவறுஇருந்துதம் என்மனதில் இடம்தந்தவள்
இன்று ஒருஓரமாய் தனியாய்மூலையில் நிற்கிறேன்
.
வெளிபடுத்தும் காதல்
குறைந்துபோகும் என்றேதான்
நிறையகாதல் சேர்க்கஆசைகொண்டேன்
எல்லாம் உடைந்துபோகும்எட்ன்று தெரிந்து
இருந்தால் அன்றே மனம் மாரியாய் பொழிந்துஇருப்பேன்
.
ஆசைக்கும் அன்பிற்கும்
இடையில் சிக்கிதவிக்கும்
பெண்ணிடம் ஓர்
ஆண்மட்டும் ஏன் இவ்வளவு காதல்என்று
கேட்டால் என்ன சொல்லிடும்,,?
.
அவன்தானே எல்லாம் என்உயிர் என்றிடும்
வாழ்வெல்லாம் நீ போதும்என்றிடும்
அவள் இதயம்
அவன் இன்றி எங்கே போகும்
அவன் நிழலோடுதானே அவள் இதயம் வாழும்
,
உன்னாலே என்ஜீவன் வாழும் எந்நாளும்
நீயின்றி அது எங்கே யாரை தேடி போகும்
உன் மார்பில் சாய்ந்து உறங்க ஏங்கும் இதயம்
உன்னைஇன்றி அது இரவெல்லாம் எப்படி முடியும்
ஏராளம் ஆசை அது நடுஇரவெல்லாம் பேசணும்
நானும் நீயும் பேசும் நாளில்
இனி ஒரு ஜென்மம் இனிதாய் காதல் வாழனும்
ஆயுளும் ஒரு ஆணை இனி இதயம் காதல்செய்யாது
ஆழியும் அளந்தாலும் கூட என்காதல் அளவு அதுமுடியாது

– கவிதை காதலன் 💓