
நான்கு வருடமும்
நானும், தனிமையும்
நீயின்றி ஒருஅசைவும்
உன்நிழலின்றி என்மனதும்
செயல்இழந்துதானேபோகும்
உயிர்இருந்தும் வெறும்
உடல்மட்டும்தானே வாழும்
.
சேர்ந்து வாழந்தானே
பிரிந்தும் வருந்துகிறோம்
இருந்தும் என்னபயன்
இமைக்கூட உன்னை பார்க்கமுடியவில்லை
.
எந்நேரமும் நீ துணையாய் வேண்டுமென்றா கேட்கிறேன்
என்நிழல் நெருங்காவிட்டாலும் பரவாயில்லை, என்விழி
ஓரமாவது வந்துபோகலாமே..!
.
சட்டென்று பெரும்மழையாய் வந்து
சாரல்வரை மெல்லபோகாது
துளிகள் இன்றி உடனே, திரும்பிபோனால்
மழைக்கு என்ன மரியாதை
.
என்னதெரியும் உனக்கு என்காதல் பற்றி
அழுவது தெரியுமா.? அழுதும் கண்ணீர்
துடைப்பது தெரியுமா.? நீயும் வெறும்
உடல்தான் நான்அறிவேன் இருந்தும் என்னசெய்ய..!
.
விரல்கோர்க்கதான், விழிபார்க்கத்தான்
விதிமுடியும்வரை நெஞ்சம்நீயாகதான்
.
தூரத்து பறவையாய்
தினம்தினம் நின்று
உன்னை ரசித்துவிட்டு போகணும்
ரசனையே இல்லாது இன்று
தனிமரமாய் இருக்கிறேன்
.
நீர்இன்றி, நீயுமின்றி
மரமும், மனமும்
எப்படி வாழும், நீர்இல்லாமல்
நீயும் இல்லாமல் அது
எப்படி அழகாகிடும்
.
சுற்றிஇருளில் வட்டநிலா நீ
உனக்கு பொட்டுவைக்கத்தானே
உன்னைகாண போராட்டமே
.
எதைக்கொண்டு வெள்ளம் நீ தடுப்பாய்
அனைகொண்டு மட்டும் காட்டாராய்
கரைதடுத்தாய்
.
உடைத்தெரியும் எல்லாம்
உனைக்கான என்மனம்
விரைந்து வரும்
உன்அழுகை செவிக்குள் புகுந்து
என்னைசிதைக்கும் என்பதால்
வரும்கோபமும் வாசலோடு திரும்பிபோகிடும்
.
என்இன்பத்தில் நீ இருந்தாய் என்றோ
நான் மறந்திருப்பேன், என்இன்பமே
நீயானதால் என்னநான் செய்வேன்
.
கடலேறி போகும் நான்
கரைவந்து சேரமாட்டேனா
கடல்தாண்டி நீயிருக்க
கரிசல்காட்ட காதல்செய்யமாட்டாயா..?
.
இழந்துபோக எனக்குஉன்னை தவிரஎன்னஇருக்கு
நான்இறந்துபோனாலும் நீ அழுவாய் என்றே
எல்லாமுடிவும் மூடி வைத்துள்ளேன்
15.
உன்மடிசாய என்னஎல்லாம் போராட்டம்
அந்தகணமே என்உயிர்போனாலும் போகட்டும்
.
வாழத்தானே என்று நீ சொல்லலாம்
வாழும்போதுஇது எல்லாம் நடக்கணுமா
.
ஆசையால் உனக்கு மல்லி பூ வாங்கிதரனும்
அரைமுழம் என்றாலும் அதுஎன்உழைப்பாய் இருக்கவேணும்
.
சேர்ந்துநாம் வாழமுடியாதா
தனித்து இருந்தாலும் காதல்வாழாதா.?
இரவுமுடிந்தும் நிலாமறுநாள் வராதா.?
செய்யாத தவறுக்கு கடவுளிடம்
மன்னிப்பும் கிடையாதா..?
.
தூரப்பார்வையால் ஒருநிமிடம் என்னைப்பார்
தூதும் என்னவென்றால் தொடும்தூரம் நீயிரு
அணைத்துகொள் ஆறுதல்கொடு
இதழோர புன்னகை நான்பார்க்கணும்
அதுமட்டும்தானே உன்னிடம் நான்கேட்கும் வரம்
.
காத்திரு காதலே நான் வருவேன்
உனக்காக உயிரும் தருவேன்
என்ஆசை நீயின்றி வேறேது
என்முன் நீ இருக்க புதிதாய்
வேறேதும் ஆசைஇருக்கு
அன்பே வா அழுதாலும் அரவணைத்துக்கொள்
காலமும் காதலோடு இரு, காத்திரு எந்நாளும்
காதலி நீ கண்ணீர்விடாதே..!