
காதல் கவிதை எழுதவா
நாம்செய்த காதல்தான்
கவிதை என்று சேர்த்துஎழுதிடவா..?
என்ன எழுதபோறேன் நானும்
என்உள்ளம் எழுதி உனக்கு தாரேன்..!
.
அப்பா இழந்தநாளும்
அழுகையில் என்னையும்
கூட்டிப்போயிடு அப்பா
என்றே நான் கடந்தநாளும்
உன்னோடே இருப்பேன்
அவர்சொன்னது போல
என்னை நீ சேர்ந்தாய் அன்றே..!
.
எல்லாம் மனதும்
சோகத்தில் மூழ்கியிருக்க
என்னை தேற்றிட என்தந்தையாய்
நீ வந்தாயே என்தந்தை நிழல்நீயே
.
பின்னாலே துரத்தி வருவாயே
தூரம்போனாலும் தூரமாய்
நின்று ரசித்துபோவாயே
உண்மையான ஆண்மகனே
மென்மையான பெண்இதயம்
உன்னிடம் இழந்தேன் நானே
.
ஒருவாகனம் பயணம்போவோம்
ஊர்கதையெல்லாம் பேசிதீர்த்துகொள்வோம்
உளறல்வாய் நீ என்னிடமே
என்உலகம் தொடங்கியது உன்இமைவசமே..!
.
உன்உரையாடல் இன்றி
நாளும் சுவைக்காது
உன்விரல் அணைப்புகள்இன்றி
ஏதும் எனக்கு பிடிக்காது
எல்லாம் இழந்தும், பலபோராட்டம் தாண்டிவந்தோமே
.
உன்னைவிட உன்அம்மாமேல்
எனக்கு பாசம்அதிகமே
நிச்சயம் என்அம்மாபோல
அவர்களும் எனக்குஇன்னொருதாயே
எல்லாம் பார்த்துபார்த்து செய்யும் இதயமே
நமைவிட்டு பிரிந்துபோனதில் மிகப்பெரியவருத்தமே
.
அண்ணன் சம்மதம் பெற்றோமே
அத்தனை இன்னல்கடந்து இணைந்தோமே
ஆயிரம் கோடி ஜென்மம் கடந்தாலும்
முடியுமோ நீயும் எந்தன் காதல்தானே..!
.
மடிமீது துயில்பாட
உனக்கு வருவேன் நானே
மகாராணிபோல் உன்னோடு
இந்தநாளும் நானும் வாழ்கிறேனே
இரண்டு பிள்ளைகள் காதல்பேசிடவே
காதல்செய்தநாட்கள் நாம்மீண்டும் போய்வருவோமா..!
.
மிகப்பெரிய செல்வாக்குகாரி நானே
பார்க்கும் யாருக்கும் என்னைகண்டால் பொறாமையே
என்கணவன் நிம்மதியாய் பார்த்துகொள்கிறானே
நான்சொல்லும் சொல்லுக்கு மறுபேச்சு
அவனிடம் இல்லவே இல்லையே
எல்லாமே நான் கேட்ட காதலே
எனைஅணைத்துகொண்ட பேரின்பம் நீயே
காலமும் என்கண்ணுள்ளே நீ இருந்திடு போதும்
கடவுள் வரமென்று அதுதாண்டி எனக்கு என்னவேணும்..!