மனம்திறக்கும் இந்நிமிடம்
மனைவியே நீ என்அருகில் இல்லையே
என்னால் உன்னை இந்நிமிடம்
நிழல் தொடமுடியவில்லையே
.
நம்காதல் கதையிது
இருவரும் காத்திருந்த
காதலோடு இணைந்து
நான்எழுதிய கவிதையிது
.
உன்னிலும் யார் அழகு
ஒருவரும் இல்லையே உலகிலே
என்னையும் யார் காதல்செய்வார்
உன்னையும் அதில் யார் வெல்வார்.?
.
கேள்விக்கு பதில் இல்லை
எப்போதும் என்அன்புக்கு நீதான் முதல்நிலை
.
என்னோடு நீ சேர்வாய் என்றும்
என்மனைவி நீ ஆவாய் என்றும்
எப்போதோ எனக்கு தெரியும்
என்நெஞ்சம் அது முன்பே அறிந்திடும்
.
முப்போதும் உன்ஏக்கம்
முடங்கிஉறங்கும் வேளையும்
கனவிலும் உன்தேகம்
கேட்குதே உன்ராகம் என்செவியில்
.
காலம் ஓடிபோனால் என்ன
நான்கொண்ட காதல் ஓடிப்போகுமா என்ன
நிச்சயம் இருக்காது
ஒருபோதும் நம்காதல் ஒருநாளும் தோற்காது
.
அதட்டிபேசவும் அன்பே
என்மனம் உன்னிடம் வராதே
அன்பிற்குத்தானே எல்லாமே
என்மனம் உன்மனம்
நன்றாய் அறிந்திடுமே
.
காலம் தேய்ந்தால் என்ன
நரைகள் வந்து நீங்கினால் என்ன
எனக்கு நீ உனக்கு நான்
என்பது ஒருநாளும் என்னில் மாறாதே
எந்நாளும் நீதான் எந்தன் காதலே
.
சிரித்துபேசிய நாட்கள் எண்ணி
அழுகும் வேளை நினைத்துகொள்வேன்
அவள் உலகஅழகி என்றுதான்
வேறுஊரில் சொல்லிகொள்வேன்
.
உனக்கும் எனக்கும் திருமணம் ஆகும்
உயிர்க்கும் மேலான துணைவி நீ ஆவாய்
எதிர்பார்ப்பு இருந்தது எல்லாமே
எனக்கு நீ என்றுதானே என்மனம்
இந்நாளும் இதயம் விரும்புது
.
விரலோடு விரல் கோர்த்திடு போதும்
விதிஎங்கும் என்ஆசை அதுவேஆகும்
எனக்காக நீ தாங்கும் வலிகள்
ஒருநாளும் நெஞ்சம் நாளும் மறக்காதே
.
நீயும் நானும்
ஒருநாள் நிம்மதியாய் வாழ்வோம்
நித்தம் நீயும் நானும்
மட்டும் போதும்
மொத்தமாய் என்னை உனக்கு
தந்தாலும் நிச்சயம் ஈடாகாது
.
விடைபெறாதகாதல் அது நம்காதல்
விண்ணைத்தாண்டி காதலிப்போம்
நித்தம் ஆயுள் அதிகம் கூடிடனும்
நிச்சயம் நீயும் நானும் மட்டும் வாழ்ந்திடனும்
.
நாள்தோறும் காதல் அதிகமாகனும்
அன்பும் ஆயுளும் இன்னும் அதிகமாகனும்
.
நித்தம் நித்தம்
நெற்றிமுத்தம் உனக்கு கொடுக்கனும்
திருமணம் ஆனபோதும்
உனக்கு நான் எனக்கு நீ
என்றே நிம்மதியாய் வாழ்ந்திடனும்
.
இதழோரம் ஈரம் சேரட்டும்
நம்வாழ்நாள்எல்லாம் கூடட்டும்
ஒருமழலை பெற்றுக்கொள்வோம்
நம்காதல் சின்னமாய் கொள்வோம்
பிள்ளை உன்போல் இருக்கட்டும்
அதுவும் என்னைஅதிகம் அன்புகொள்ளட்டும்
.
அவள் என்னை அழைக்கும் தருணம்
நான் உனக்கு மழலையாகவே மாறிடுவேன்
.
எனக்காக எல்லா வலியும்
பொருப்பவளே
எனக்காக என்னில் வந்து சேரும்காதலே
எல்லாம் உனக்காகத்தான்
நான்இங்கே தவிப்பதும்
உன்னை ஒருநாள் சேர்வதற்காகதான்
.
உன்னோடு நித்தம்
நான்சேர்ந்து வாழனும்
உன்னோடுதான் என்ஜென்மம்
அது முடிந்திடனும்
காலம் எல்லாம் உன்னோடு
இருக்கும் நிமிடம் எனக்கு மட்டும்போதும்
.
நெஞ்சினில் ஆசையென்று ஏதுமில்லை
நித்தம் எனக்கு நீ உனக்கு நான்
ஜென்மம் முழுதும் சேர்ந்து வாழனும்
ஆயுளும் நீ எனக்கு நான் உனக்கு
என்ற அகராதி ஒருநாளும் மாறிடக்கூடாது
என்ஆசை என்னவாய் இருந்திடக்கூடும்
எந்நாளும் அது உன்னைதாண்டி இல்லையேஎப்போதும்
.
காலமும் என்னோடு நீ மட்டும்போதும்
கடைசிஆசையென்று எனக்கு இல்லையே வேறுஏதும்..!
கற்பனையும் கலங்குதடா உனது வரிகளை உணரும் போது……….✨