பள்ளியில் கால்பதித்த கணமது
ஒருவரும் தெரியாமல்
உள்நுழைந்த உணர்வது..!
.
திரும்பும் திசையெங்கும்
வண்ணங்கள் ஆயிரம்
திருத்திருவென முழிக்கும்
மழலையாய் அந்நேரம்..!
.
கூட்டத்தில் தனியாய் நின்றேன்
கூட்டமும் இருந்தாலும்,தனித்தே இருந்தேன்..!
.
எண்ணற்ற புதுஉணர்வு என்னுள்ளே
என்னவெல்லாம் சொல்வேன் இந்நொடியே..!
.
அனுதினம் வந்துபோகிறேன்
அமைதியாய் நானும்..!
அளக்கமுடியாத வாதங்கள்
குறைத்துகொண்டேன்
கூட்டுஒரு நட்பும் இல்லாமல்..!
.
எவ்வளவு நாள் இப்படி போகுமோ..?
எப்போதுதான் இந்நிலை மாறுமோ..?
புலம்பியே கிழவி ஆகிடுவேனா…?
புன்பட்டுகொண்டே இருந்திடுவேனா..?
.
ஒன்றும் சொல்லாமல்
உன்வருகை நிகழ்ந்தது
அந்நாள் என்மனம் இன்றும்
என்றும் எப்போதும்மறவாது..!
.
கூட்டுசேர என்னிடம் வந்தாயோ..?
கூட்டுகளவாணியாய் கூடவே இருப்பாயா..?
கேள்வியே, தோழியாய் தொடர்வாயா..?
அழுகணம் ஆறுதல் தருவாயா..?
.
படிப்பெல்லாம் அப்பாற்பட்டது
பள்ளி‘கட்’அடித்து ஊரைநாம்சுற்றியது
மறந்து போவோமா..? மறந்தும் மறந்து போவோமா..?
.
வகுப்பில் நீயின்றி நானும் தனித்துஇருந்ததில்லை
நீ வராமல் என்உலகம் அழகானதில்லை
அரட்டைகள் எல்லாம் உன்னோடுவே
நீ இருந்தால்தானே அனைத்தும் அழகாகுமே
.
தவறாமல் நீ என்னோடு இருந்திடு
தொலைந்து போனாலும் என்நிழல் தொடர்ந்திடு
உறக்கத்திலும் நீ கட்டிபிடித்திடு
உறங்கினாலும் நெருங்கியே வந்திடு
.
எனக்காக உணவெல்லாம் நீ கொண்டுவருவாய்
சாப்பிடமுடியாதென்றால் நீயே ஊட்டிவிடுவாய்
என்கண் முன்இருக்கும் என்அன்னையே
எப்போதும் உன்மீதான நட்பு குறையாதுவே
.
பேசும்நேரங்கள் குறைவாகஇருந்ததில்லை
யாருகூட இருந்தாலும் அன்பை வெளிகாட்டாமல்
இருந்ததில்லை
எனக்கு எல்லாம் நீயே, என்ஆசை தோழியே
.
கணம்எல்லாம் மகிழ்ந்திடுவோம்
கண்சிமிட்டாமல் ரசித்திடுவோம்
கண்ணீர்இல்லாமல் வாழ்ந்திடுவோம்
கரங்கள்விடாமல் காலம்இருப்போம்
.
எதற்காக என்னிடம் வந்தாயோ நீ
என்னை என்னை தரவே நீ வந்தாயோ
எல்லாமே கஷ்டங்கள் தொலைத்தேன் உன்னால்
எல்லாமே இஷ்டங்கள் நீ என்னோடு இருந்ததால்
.
ஊரெல்லாம் உன்னோடு
போனாலே போதாது
உலகெங்கும் நாம்போவோம்
ஒன்றாவே நீ, நானும் நண்பனாக..!
.
கடைக்குள் புகுந்துவிட்டோம்
வயிறுநிறைய நிரப்பிவிட்டோம்
பணத்தைமட்டும் சேர்த்துகொடுத்தோம்
கால்கடுக்க நடைபழகி கொண்டோம்..!
.
ஆல்இந்தியா அலைவரிசை
அதுவும் கூட பின்புதான்
ஆள்இல்லையென்றாலும் அலப்பறை
கொடுப்போம் அதுவும் நன்றுதான்..!
.
மனமெல்லாம் நீ மகிழ்வும் நீ
இளைப்பாற மடிகொடு நீ
காதலிக்காத காதலி, கணமும் நீயே என்தோழி
.
முடிந்துபோகாமல் உடன்இரு
முறிந்துபோகாமல் இருந்திடு
கண்ணீர்சுமக்கும் கணமது
காரணம்வேணாம் என்னோடுஇரு
கடவுளை வரம்கொடு
நட்பை என்னோடு இருக்கவிடு
நகர்ந்தாலும், தொலைந்தாலும்
நெருக்கத்தில் வைத்திடு..!
விரல்பிடித்தாலும், வெகுதூரமென்றாலும்
என்னோடு சீக்கிரம் கரைசேர்த்திடு..!