எனக்கு முன்னால்
பூமி வந்தவள்
எப்போதும் எனக்கு
தொல்லையாய் இருந்தவள்..!
.
அக்கா என்று
அழைத்த நிமிடங்கள் ஏது.?
அரவணைப்பாய் இருந்த
நொடிகளும் இருந்தது கிடையாது..!
.
எலியும், பூனையுமாய்
நீயும், நானும் சிலம்நேரம்
கதறியசத்தத்தில்
தாய், தந்தைக்கே வரும் ஜுரம்..!
.
படிப்பில் போட்டி, பந்தயத்தில் போட்டி
பிடித்ததிலும் போட்டி, வெறுப்பதிலும் போட்டி
உன்னைநான் வெல்வதிலும் போட்டி..!
.
இரண்டு வருடமே அவள் பெரியவள்
இதற்காக அவளைஎல்லாம் ‘அக்கா’
என்றழைப்பதா..? சண்டையும் ஒருவிதசுகம்தான்…!
.
முந்திக்கொண்டு பிறந்தவள் மூத்தவளா..?
முதல்உரிமை அவளுக்குதானா..?
எதில்குறைந்தவள் நானும் அவள்போலதான்..!
.
உள்உணர்வு வெளிக்கொண்டதில்லை
ஒருநாளும் இதைசொன்னதில்லை
முகம்பார்த்து புன்னகைசெய்ததில்லை
பிரிந்துபோக எப்போதும்நினைத்ததில்லை..!
.
ஆரம்பத்தில் அய்யோட
தொல்லைவிட்டது என்றுநினைத்தேன்
நீ, கடந்துபிறகு
நீயின்றி, இதழ்இழந்த பூவாய்ஆனேன்..!
.
அன்பாய், அவளிடம் ஆறுதலும் இல்லை
அரவணைப்பாய், அவளிடம் உரையாடல் இல்லை
.
அவள் என்னைப்பற்றி என்னநினைப்பாளோ..?
என்று எனக்கு கவலைகள்இல்லை..,
முழுநூலும் மனதார எழுதும்
முழுமனதும் கவிதையாய் இருக்கும்..!
.
தங்கை நானும்
தனிஅறையில் நீயின்றி வாடுறேன்
ஏனோ இதுஎல்லாம் உனக்கு
புரியும்என்றே எதிர்பார்க்குறேன்..!
.
நேரம்கிடைத்தால்
சற்றுநேரம் சண்டைபோடு
சண்டைபோட்டநினைவுகளை
கொஞ்சம் எண்ணிப்பாரு..!
.
கல்யாணம் முடித்து
கரம்பிடித்து விட்டுசென்றவள் நீயடி..!
கண்ணீர்வடித்து
தனிமைவெறுத்து வெறுமையைஇருக்கிறேன் நானடி..!
.
தங்கை என்னை தினமறவாதே
ஒருமுறையாவது என்எண்களை அழைத்திடேன்
சோகத்தை என்னோடு பகிர்ந்திடு
இன்பத்திலும் என்நியாபகம் கொண்டிரு..!
.
சண்டைகள்போட்டு சலித்துவிட்டேன்
சமாதானம் பேசஇந்நூலை அனுப்பிவைத்தேன்
சுமூகமாக சரிசெய்துவிடலாம், இனிமேல்
ஒன்றாய் நாம்இருப்போமா..?
விவரீதமாக முடிவெடுத்தால்
விளைவுக்கு பொறுப்பு நானில்லை..!
.
முதல்குழந்தை பெற்று
என்கையில்கொடு
பார்த்துகொள்கிறேன், உன்னிலும் சிறந்தவளாய்
சித்திஎன்று அவள்அழைக்கும்
சமயம் என்னையும் கொஞ்சம்மறந்து போகிறேன்..!
.
பாவம்தான் அவர்
பாவி நீ என்னசெய்ய போறாயோ..?
பார்த்துஇருக்க சொன்னதாக சொல்
பாவைநீயும் காதல்செய்ய அதிகமாய் கற்றுகொள்..!
.
தினம்எழு சீக்கிரம்
சமைத்துகொடு சீக்கிரம்
பட்டினிபோடாதே யாரையும்
பாவம்தானே அனைவரும்
உன்சமையலுக்கு எல்லாரும்
சீக்கிரம்அடிமையாக போகிறார்கள்..!
.
ரகசியம்ஒன்று சொல்கிறேன் கேள்
ரகசியம் உன்னிடம் போய்சொல்வேணா
உன்மனதை நீயே கேள்..?
திறந்துவைத்த புத்தகம் நீயே
திறந்தவாயை கொஞ்சம் மூடிக்கொள்ளேன்
.
என்னோடு என்னருகில் இந்நிமிடமில்லை
இரண்டு மாதங்கள்தான், உன்அருமை புரிந்தேன் மெல்ல
சண்டைகள் இல்லாமல்
நிமிடங்கள் ஓடல
சமாதானங்கள் கேட்க
மனசும் முன்வரல
ஒருப்பொழுதும் எனைபிரிந்து
இருந்திட என்னிடாதே..!
முழுகாலமும் உனக்காக
உன்னோடு இருப்பேன்
எனை நீ என்றும் மறந்திடாதே..!