1.
வயதுக்கு பெரியவனே
எனக்கு எல்லாம் நீயே
அண்ணனாய் என்னோடு பிறக்காதவன்
அன்னையாய் எனக்கு பாசம் அள்ளித்தந்தவன்
.
2.
மழலையாய் நான் உன்னிடம்
மடிதந்து என்னை தாங்கிடுவாய்
பிடிவாதம் விவாதம் ஆகும்போது
பிடித்தாலும் எனக்காக விட்டுத்தந்திடுவாய்
.
3.
உனக்காக எனக்கு தெரிந்து
ஏதும் செய்ததில்லை
உன்னைப்போல் பாசமும்
ஒருதாய்பிள்ளையாய் இருந்தாலும்கிடைக்காதே
4.
ரகசியம் உன்னிடம்
திறக்காமல் இருந்ததில்லை
ரகசியம் என்வாய்
உலறாமல் இருந்ததில்லை
.
5.
எனக்கு ஒன்னுனா
கண்ணீர்விட்டு அழுவாய்
நான் கண்ணீர்விட்டால்
என்பிள்ளை அழகூடாதென்று அணைத்திடுவாய்
.
6.
உனக்கு திருமணம் ஆனாலும்
நான்தான் உனக்கு முதல்மழலை
உன்பிள்ளைக்கு என்குழந்தையே
வாழ்க்கை துணை
.
7.
எழுதிக்கொடு இப்பொழுதே
என்குழந்தைக்கு நீயே தாய்மாமன்
உன்துணை அவனுக்கு எந்நாளும் வேணும்
8.
எங்கே போனாலும்
என்னோடு கூடவருவாய்
என்னசொன்னாலும் எப்போதும்
காவல் நீ ஆகிடுவாய்
9.
உனக்கு எந்நாளும் நான் அம்மாவாக
ஆயிரம் ஆசை, என்னைகேட்டே எதுநாளும்
நீ செய்திட எனக்கு அவ்வளவு ஆசை
10.
ஒருகருவறையில் ஒருநாளாவது
ஒட்டிநாம் பிறக்கணும் வெளிவரும்போது
ஒருதாய்பிள்ளையாய் நாம்இருந்திடனும்
.
11.
நீ வேறாய், நான் வேறாய்
ஒருநாளும் நடந்துகொண்டதில்லை
துளிர்விடும் பூவாய் என்புன்னகை
மலர்ந்திடுமே உன்னைபார்க்கும் அந்நிமிடமே
.
12.
அக்கறைகள் எல்லாம் அளவுகள் இல்லை
உன்அன்புக்கு எப்போதும்
குறைவுகள் இருந்ததும்இல்லை
13.
சிறுவயதில்இருந்து இப்போது
விடலைபருவம் வரை
நீ காட்டும் பாசம் அதுமாறாது
சிறுமாற்றமும் எப்போதும் நான் கண்டதுகிடையாது
14.
வேறொரு கைபிடித்து நான்வேறுவீடு போகும்போது
வழியும் கண்ணீரில் தெரியும் என்விழிஎல்லாம் உன்முகம்
வளர்ந்து இருந்தாயே தவிர, நீ பாலும் சின்னகுழந்தையே
15.
நான் இன்றி நீ தனித்து இருப்பாயா..?
நான் அழுதால் நீ தாங்கி கொள்வாயா..?
16.
எனக்கு எல்லாம் நீயடா
என்ஆசை தந்தையும் நீயடா
உண்மையான உறவுக்கு
உன்னைபோலே இங்கு யாருடா
உலகம் நீயானபின் வேறுஎன்ன எனக்கு வேணுமடா..?
17.
உன்பாசம் என் பிள்ளைக்கும்
சேர்த்து கிடைக்கணும், நான்
வாழும்போதே அதை பார்த்துரசிக்கணும்
திட்டிவிட்டு கூடவே இருந்திடு
எப்போதும் நீ பேசாமல் இருந்திடாதே..!
.
18.
அப்பாவுக்கு அடுத்து அண்ணன் என்பார்கள்
எனக்கு அப்பாவும் அண்ணாவும் சமமாய்இருக்கிறார்கள்
எப்போதும் உங்கள்பாசம் கடல்அலையாய் ஓயாது
ஓய்ந்தாலும் என்னைதொட திரும்பிவராமல் இருக்காது..!
19.
ஒருகணம் எனைஉன்மழலையாய்
தோளில் சுமந்து கோவில்கள் பார்க்கவைத்து
ஆசையாய் இருக்கும் யானைமீது சவாரிஏற்றிவிடு
எப்போதும் உனக்கு பிள்ளையாய்
வளர்ந்தும் நான் தொல்லையாய் இருந்திடுறேன் உன்னோடுவே..!
20.
மறக்காதே நான்மழலை
அதுவும் உன்மழலை
மனம்முடித்து மணவாளன் ஆனவுடன்
மனைவிவந்து சொன்னாலும் நீ மறந்திடாதே
உன்முதல்குழந்தை நான் என்பதை
எப்போதும் எந்நாளும் நீ மறக்காதே
.
அன்னையே என் அண்ணனே
தந்தையே பெண் காவலனே
எல்லாம் எனக்கு நீயே
எந்நாளும் இது நீ மறந்திடாதே
உன் ஆசை தங்கை பாசத்தின் பரிசாய்