மனதும் உடைந்து போனது
கணம் ஆயிரம் அடி
கண்ணாடியாய் நீயும், நானும்
கண்களும் ஊர்கன்னே
பட்டுதான் இருக்கும்
.
நான் உனக்கு என்றதும்
நீ என்னவன் என்றதும்
சொல்லிகொண்டுதான் வந்ததா
சொல்லாமலே மனம்வென்றதா..?
.
கல்லூரி இருந்தும் காதல்தாண்டி
பலபிரச்சனை நீதான் என்காதல் வேண்டி
உன்னிடம் வந்தேனே
எல்லாம் நீயென்று இத்தனை நாட்கள்
நான் இருந்தேனே
.
ஒருநிமிடமும் என்முடிவில் மாற்றமில்லை
என்முடிவில் மாற்றமில்லை
எந்நாளும் நீதான்
என்முடிவு அதுமாறபோவதுமில்லை
.
காலமும் உன்னோடுதான் என்வாழ்வு
கண்மூடும் பொழுததும் உன்னோடுதான்
என்அன்பின் வீழ்வும்
முடிவுரைக்கும் காதல் முடிவேயில்லை
முடிவேஇல்லாத காதல்
உன்னோடுதான் என்னுள்ளே
.
எல்லாம் மாறியதா
என்அன்பும் உனக்கு சலிப்புஆனதா.?
நான் நானா இருக்கேனா
உன்னால் நான் நல்லா இருக்கேனா.?
சில நான் அழுகாத நாட்கள் இல்லை
யாரிடமும் போய் நானும் இதசொல்ல
.
உனக்கும் எனக்கும்
இடையில் யாரும் வேண்டாம்
அடித்து கொள்ள ஆட்கள் வேண்டாம்
நீ எனக்கானவன்
நம்பிள்ளைகாகதான் எல்லாமே
நீதானேடா எந்தன் முதல்மழலை
.
நீ உன்னை இழக்காதே
கோபம் ஆயிரம் இருந்தாலும்
என்னை நீ வெறுக்காதே
தாங்கமுடியாத பாரம் மனம்தான் என்றாலும்
அழுகை எந்நாளும் உந்தன்
அணைப்பே எனக்கு போதும்
.
வா கட்டிஅணைத்துகொள்
அமைதியாய் என்மார்பில் நீ ஓய்வெடு
அழுதிடு அடித்துவிடு
வாழும் வாழ்க்கை உன்னால்தானே
எனக்கு அழகானதே
உனக்கு பாரமாய் இருக்க இந்தபெண்மை
நெஞ்சம் எப்படி தாங்கிடுமா.?
.
கடைசிப்பக்கம் முடிக்கிறேன்
காலமும் காதல் நீ போதும்என்கிறேன்
முடிவில்லா நம்காதல் கணமும் முடியாது
அதுதான் நம்செய்யும் நிஜகாதல் கதையிது
முத்தத்தோடு இம்கவிதை முடிக்கிறேன்
மொத்தமும் எனக்கு நீ வேணும் என்பதே
நான் எந்நாளும் கடவுள் வரமாய் வேண்டுறேன்..!
Rompa azhaga irukku……
வாசிப்பவர்கள் நிச்சயமாக தங்கள் மனதை திறந்து சில வார்த்தைகள் சொல்லிவிட்டு சென்றால் எழுதியவனுக்கும் இன்னும் எழுத ஆசைஎண்ணம் இன்னும் அதிகமாகும்.💗