முதல்முறை

எழுத்தால் என்மனம்திறக்கிறேன்

மனமெல்லாம் நீதான்

வேண்டும் என்று நிமிடம்

உன்னிடம் காதல்சொல்கிறேன்

.

உன்னைகண்ட நிமிடம் மறக்குமா

உன்னைநினைத்து வாழ்ந்தநொடிதான்

கடந்துபோய்விடுமா..?

.

முன்னால் இருந்தது

எல்லாம் நகர்ந்து போகட்டும்

நஷ்டம் ஏதுமின்றி நம்இதயம் இணைந்தேவாழட்டும்

நீயின்றி இன்று நானுமில்லை

நானின்றி உன்இதயம் வாழுமா புள்ள..!

.

முழுதாய் உன்னிடம் சேரதான் நான் பிறந்தேனா

உன்னோடு வாழதான் இந்த பூமிவந்தேனா..?

.

கடவுள் படைப்பில்

உன்னில் ஏதுஅழகில்லை

உன்னை ஒப்பிட்டு பார்க்க

உலகஅழகி யாருமில்லை

உன்னோடுதான் என்வாழ்வு அதில்ஏதுமில்லை

மாற்றமும் ஒருநாளுமில்லை..!

.

வா வந்து அணைத்துகொள்

இருவரும் இடைவெளியின்றி வாழ்வோம்

இதழோரம் முத்தம் எண்ணிக்கை பாராமல்

கொடுத்துக்கொள்வோம்..!

.

இணையும் நெருக்கத்தில் காதல்மறப்போம்

நீ, நான் மட்டும் போதுமென்று

புதுகாதல் படைப்போம்

நேரம், காலம் எல்லாம் தேவையில்லை

நீ, நான் இணையும்போது

காலம், நேரம் எல்லாம் பார்க்கவேண்டியதில்லை

.

எனக்கு நீ, உனக்கு நான்

இதனிலும் என்ன புதுக்கவிதை இருக்கு

இதனிலும் கவிஞர் எழுத

என்னஅழகு மீதம் இருக்கு

எனக்கு எல்லாம் நீதானடி

உந்தன் பேச்சுக்கு மறுபேச்சு ஏதும்இல்லையடி

.

காலமும் எனக்கு நீ போதும்

கடைசி ஆசையாய் எனக்கு இல்லை வேறேதும்

முழுகணம் உன்னைநான் காதல்செய்யனும்

முத்தத்தோடு என்ஆசை உன்னிடம் நான்திறந்திடனும்

.

கடல்போல அலையாய் உன்னைநான் காதலிக்கனும்

நகம், சதையாய் உன்னைஒட்டியே இருக்கனும்

உன்னை நான் பிரியக்கூடாது

விலகாமல் நிழலாய் உன்னைநான் தொடர்ந்திடனும்

இணைபிரியாத வாழ்வு எனக்கு அதுபோதும்

இருதயம் ஆசையாய் எனக்கு வேறென்னஆகும்..!

*- கவிதை காதலன்*