எல்லாம் எனக்கு நீதானா
என்மனம் உன்னிடம்
இந்நிமிடம் திறந்தேனா.?
மனம்முழுதும் எங்கு நீதான்
மனதார மனமுடித்தவரும் நீதான்
.
வருடங்கள் பலஆயினும்
நம்இருதயம் காதல் மாறிடுமா.?
வயதுதான் கடந்து போனாலும்கூட
காலத்தில் காதல் போய்விடுமா.?
.
நீதான் என்காதல் என்பதும்
என்னோடு நிழல் நீ உரசிடு என்பதும்
எந்நாளும் எனக்கு என்மனதில் மாற்றம் ஆகிடுமா.?
.
ஆயிரம்தான் இருந்தாலும்
அடிக்கு நூறுமுறை சண்டைஎன்றாலும்
என்அன்பு உன்னிடம் மாறிடுமா.?
அடித்துவிட்டாலும் அன்பானவரை
உன்னிடம் நான் மழலையா.?
.
நீ மட்டும் வேண்டும் என்றதும்
வாழ வாழ்க்கை உன்னோடு போதும் என்றதும்
மறக்குமா மனம் நீயின்றி நான் நிலைக்குமா அனுதினம்
.
உறக்கமே இல்லை என்றாலும்
உரிமையும் எனக்கு நீதான் என்னும்போது
உன்மார்பு தலையணை போதும்
உன்பரிசம் எனக்கு ஆயுள் வரமாகும்
.
விரல்பிடித்து நெடுந்தூரம் போப்கானும்
விதிமுழுதும் எனக்கு நீதான் வாழ்வாகனும்
நிரந்தரமாய் எனக்கு நீ போதும்
நித்தமும் என்நிழலிலே நான் நீ வாழனும்
.
சாபம்எல்லாம் வரமாய்தான் பார்க்கிறேன்
சபித்தவர்கள் நல்லா இருக்கனும்தான் நினைக்கிறேன்
எனக்கு யாரும் வேணாம்
கடவுளும் உன்னைத்தவிர எனக்கு இருக்கவேணாம்
.
முழுநாளும் முழுநேரமும்
முதல் – முடிவாய் நீ, நான் காதலிக்கனும்
முடிந்திடுமா என்முகவரியும்
முத்தத்தோடு தொடரும்காதல்
நெற்றிமுத்தமின்றி நிச்சயம் முடிந்திடுமா.?
.
கடைசிப்பக்கம் எழுதுறேன்
கண்ணீர்விட்டாலும் என்காதல்
நீதான் என்கிறேன்
நீ மட்டும் எனக்கு போதும்
நினைவோடு வாழும் நிமிடம்போதும்
நிச்சயம் வாழ்க்கை உன்னால்தான் அழகானது
நிதானமும் உன்னோடுதான்
நினைவின்றி போனாலும் உன்னோடுதான்
காலமும் உன்னை நான் காதல்செய்யனும்
நரையேறி போனாலும்கூட காதல்இன்னும்
அழகாக மாறிடனும் காதலா..!