முதல்சந்திப்பு கோவில் அடிவாரம்
அங்கே அவர்வருகையால்
நான் சீதையானேன்
ராமன் அவரென்று அன்றே நான்உணர்ந்தேன்
.
முதல்பார்வையில்
மழைபொழியுமா.? மனமும் அவர்வசம் போகுமா.?
நடந்ததே கவிதைகள் எல்லாம் கண்முன் நிகழ்ந்ததே..!
.
யாரோ அவர் ; யாரோ நான்
என்னுள் புரியாத மயக்கம்
இன்றுவரை தெரியவில்லை காதல்
என்றதொரு கிறக்கம்..!
.
விருப்பம்கொண்டு
இணையம் பரிமானேன்
இணையத்தால் இடையில்லாமல்
உரையாடல் நாங்கள் தொடர்ந்தோம்
.
வினவினாரே அவர்
விழிமூடி விழிபதற்குள்
வாங்கினாரே என்எண்கள்
காதல் மயக்கமா.?
அவர் பேச்சு யாரையும் இழுக்குமா.?
.
இதயம் கொடுப்பது தவறா
எண்கள் கொடுத்தது சரியா.?
தெரியாமலே நான் கொடுத்தேன்
எனக்குள் ஆயிரம் கேட்டுக்கொண்டேன்
.
உரையாடல் உன்னோடு
ஒருபோதும் ஒருநாளும் தீராது
இனிமையாய் என்னோடு எப்படித்தான் பேசுராயோ.?
நான் பேசுவதெல்லாம் கவிதைஎன்று எப்படிதான் வாய்
கூசாமல் பொய் சொல்லுராயோ.?
.
பொய்யில்லாமல் கவிதையில்லை
உவமையின்றி உணர்ச்சியில்லை
கடமைக்கு உன்னை காதலிக்கவில்லை
கடந்துபோக நான் உன்னிடம் வரல
.
மனம்திறந்தவரே மணந்துகொள்பவரே
மறுக்க நான்இசைவேனா.?
உன்னை வெறுக்க நான் உயிரோடுஇருப்பேனா.?
.
காத்திருந்ததும் காதலனே
இத்தனை நாளாய் உனக்காகதானா.?
கண்மூடி உறங்கினாலும்
நான் உன்மார்பு செர்வேனா.?
.
அதற்கென்னடி ஆயுள் வேணுமா.?
அததனை தந்தாலும் வாழ்வும் வரணுமா.?
என்னநாளும் நீ கேளு
என்இமையை மட்டும் நீ விட்டுவிடு..!
.
இரவு முழுதும்
கூந்தல்கோத நீ தலைமுடிகுள்ளும் நீ
அசந்துபடுக்க உன்மார்பு
ஆசைதீர்க்க உன்உதடு
பிள்ளைமழலையாய் நீ கொஞ்சி தீர்க்கனும்
என்னை மறந்து நான் உன்னை யாசிக்கனும்
.
கவிதைக்காரியே
காரிருள் தீர்ப்போமா.?
மறுநாள் வரை ஒட்டியே இருப்போமா.?
எட்டிபோகனும்னா என்னசெய்யனும்டி
தொட்டில் பிள்ளைதாலாட்ட
தாலி இந்தகாலம் வேனுமாடி..?
.
கர்ப்பக்காரிதான் நான்
கட்டிபிடித்ததும் கண்ணியம்
விடமட்டேன், முத்தம்
இட்டதும் உன்னில் மூழ்கிடமாட்டேன்
.
எட்டியே நீ இருந்திடுயா
என்பாவம் எடுக்க
என்னை தொட்டுபார்க்க நீ வராதயா..!
.
மீசைமுறுக்கி என்ஆசைதூண்டாத
காவல்காரர் நீயாய் இருந்த
எனக்கு என்ன பயமா என்ன./
.
உன்னை பார்த்து எனக்கு என்னபயம்
என்னை பார்த்துதான் நீ பதுங்கனும்
ஆசையாய் மல்லிப்பூ வாங்கிதரனும்
கோபத்தோடு நான் போனாலும்
நீயே எனக்கு சூட்டி விட்டிடனும்.!
.
கோபக்காரித்தான் நானும்
மீளாது அன்பை நீ தரவேணும்
போகாது என்வீட்டில் நீ இருக்கணும்
போர்வந்தாலும் என்ராஜாவாய் என்னோடு வாழனும்..!
.
அளவில்லா ஆசைகாரியே
ஆயுள்வரைக்கும் நான் வாறேன்டி
அது போதாதுன்னா
காலில் விழுந்தாவது
கடவுளிடம் இன்னொருஜென்மம் வாங்கிதாரேண்டி
.
இரண்டு ஜென்மம் இவளுக்கு போதுமா
ஏழு ஜென்மம் கேட்டா நீ
ரொம்ப குறைஞ்சுபோவாயா..?
.
அறிவுகெட்டவன்தான் நான்
உன் அன்புக்கு அடிமையானவன்தான் நான்
இரண்டுமடங்கு கேட்கலாம்
இதுபோலவே ஒருவீட்டில் இருஇதயம் சேர்க்கலாம்
.
அளவிலா காதலனே
அளந்துதான் காதல்சொல்வாயா.?
முழம்போட்டு காதலை முடிக்கமுடியுமா.?
வரம்கேட்டு வாழ்க்கை வளர்க்க முடியுமா
சிரம்தாழ்ந்து உனக்காக கரம்மட்டும்
எனக்காக நீ தருவாயா.?
.
போதுமா உனக்கும்தான்
ஆசையும் இதுதானா.?
மாலைநேரம் மல்லிப்பூ கேட்ப
மடிசாய என்உசுரையும் எடுப்ப
வாசனைதான் எங்கு இருந்து வருமோ.?
ஆசையும்தான் அது தூண்டாம விடுமா.?
.
என்னஎன்ன சொல்லி என்னை
நீ மயக்குற
என்ன நான் செய்யபோறேனோ
உன்னை நான் வச்சு
.
கணவனா நீ வரணும்
காரிருள் நீ தொடரனும்
நெற்றிமுத்தம் நீ இடனும்
நிதமும் களவும்
காதலும் களவியலும் அரங்கேறிடனும்
.
இதழும் இமையும் கண்மூடனும்
நழுவும் உடைகள் மனம்மறக்கணும்
உறைந்துபோக நெஞ்சினில் நீ சூடுதனிக்கனும்
விரைந்து நான் விரலால் உன்னை சிறைபிடிக்கணும்
நகர்ந்தும் நலிவியும் மீன்போல மாறனும்
வலையாய் என்வயதை நீ மென்று திங்கணும்
.
நழுவாத கூவத்தில் நடுங்காத ராத்திரியில்
ஒருமீனாய் உன்ருசிக்கு பசியாகனும்
மீண்டும் மீண்டும் புதுஉணவுபோல
ஒருவாடிக்கையாய் எனக்கு நீ வரணும்
காலையும் முடியாமல் மாலையும் முடியாமல்
மயக்கத்தோடு நாம்இருக்கனும்
மரணம்வரை நாம்சிநேகிக்கனும்
.
ஆழியிலும் அழியாதகாதலாய்
காத்திருக்கும் கண்மணிநானாய்
உனக்குள்ளே எனைதொலைக்கிறேன்
உன்னோடு என்வாழ்வு துறக்கிறேன்..!
Adipoli🥰🥺❤
Super
அருமையான கவிதை
நட்சத்திரக் கூட்டத்தின் நடுவில் தனியே மிளிரும் நிலவாய்…💫✨ அவள் காதலைக் கூற முயலும் உன் உளறல்கள் அழகு..!🪄
👌🙂…. Romba nalla eruku kavingarey
Endrum ungal kavithaiyin rasigai….