மனம்திறக்கிறேன் உன்னிடம்

நீயின்றி எப்படி இதயம்வாழும்

இன்பமும் உன்னால்தான்

என்இதயம் உணரும்

இருதயம் இணையாமல்

எப்படி காதல்விலகும்


கல்லூரி உன்னைபார்த்த நாள்

கலகலவென பேசிசிரித்த நான்

அதிகம் பேசியகணங்கள் இல்லை

ஆயுளுக்கும் உன்மேல் அன்பு குறையபோவதில்லை


காலமும் எனக்கு நீ போதும்

கண்மணி ஆசையாய் என்னகேட்க

போகிறேன்நானும்


விரல்கோர்வையோடு உந்தன் நிழல்

வீதிமுழுதும் வலம் வந்திட உந்தன்அனுமதி

திருமணமாகி தம்பதி நாமாகி

இந்தஉலகமே பார்க்க காதல்புரிய செய்வோம்


அழியாத காதல் நாம்என்றும்

ஆழியும் அழிந்தாலும் மறக்காதகாதல்

நமதென்றும்

கல்வெட்டில் பொறிக்கச்செயலாக


முதல்முறை சொன்னபோது

காதலாய் இதழ்வெளியே

சொல்ல முன்வரவில்லை

இருந்தாலும் இன்பம்

நெஞ்சம கொள்ளும் ஆசைதீரவில்லை

ஊரே கேட்க சத்தம்போடணும்

உலகம் உன்னோடு என்றே எனக்காகிடனும்


நிரந்தரமாய் நீ

என்நிழல் உரசனும்

உனக்கு மட்டுமே

என்உடல் படைக்கப்பட்டதாய் இருக்கனும்

முத்தத்தோடு காதல் தீண்டும் தருணம்

முணங்களில் முடிந்தாலும்

மீண்டும் மீண்டும் காதல்மலரும்


எச்சில்கள் இடமாற்றி காதல்கொள்ளனும்

நீயும் நானும் சேரும்கணம்

உலகம் அலைகடல் ஆழமாய் பார்த்திடனும்

இனம், மொழி, மதம், ஜாதி எல்லாம்

என்றோ என்வாழ்வில் வந்தது

எனக்கும் உனக்கும் அன்பிற்கு

இடையூறு தந்தது..!


எதற்கும் பயப்படாதே

என்னதவிர உனக்கு ஏது பாவைஉலகிலே

வா வந்து அணைத்துகொஞ்சம் அழுதாலும்

பரவாயில்லை

நிறைய காதல் செய்திடலாம்

வானம் போகும் பறவைக்கு

வானம்போகும் பறவைக்கு நொடி

எல்லாம் எதற்கு..!


எனக்கு யார் என்னசொன்ன

நீயின்றி அடுத்தநொடியில்லை

ஆணிவேரின்றி உலகில் மரத்திற்கு

வேலைஎன்ன இருக்கு

என்ஆண் நீயின்றி என்அன்பு

எங்குபோகிடும் தெரியாது

நிரந்தமாய் நாயும், நானும்

காதல் சத்தியமாவோம்

மீண்டும் மீண்டும் மீளாது

காதல் பேசிடும் வரலாராய் மாறிடுவோம்